English සිංහල
இப்போது விசாரிக்கவும்

பிரத்தியேகமானதொரு நிதிச் சேவையினை வழங்குவதன் முக்கியத்துவத்தில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.இவ்வர்பணிப்பானது எமது வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் வலியுறுத்தப்படும் என்பதுடன் இது எமது நோக்கம், குறிக்கோள், மற்றும் கூட்டு நிறுவன பெறுமதிகள் என்பவற்றினால் வரையறுக்கப்படுகின்றது.

நோக்கம்

வாடிக்கையாளர் ஆலோசை மற்றும் மேலான்மை, முனைப்பான முன்னணி தீர்வுகளுக்கான பேரார்வம் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்களைத் தாண்டிய சேவைகளை வழங்குதல் என்பவற்றினைத் தேவைப்படுத்தும் பிரத்தியேகமானதொரு நிதிச் சேவையினை வழங்குவதன் முக்கியத்துவத்தில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

குறிக்கோள்

தொழிற்துறையில் வங்கியல்லா நிதிச் சேவைகளின் தரத்தினை அதிகரிப்பதற்கு உதவி செய்தலே எமது நோக்கமாகும். அனைத்து சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளையும் அடைந்து அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ள சிக்கனமானதும் சௌகர்யமானதுமான நிதிச் சேவைகளை வழங்குதல்.

கூட்டு நிறுவன பெறுமதிகள்

எமது செயற்பாடுகள் அனைத்திலும் நெறிமுறையான நடத்தையினை அதிக தராதரத்துடன் பின்பற்றி நடப்பதில் நாம் அர்பணிப்புடன் செயற்படுகிறோம். நேர்மை மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றினால் தோற்றுவிக்கப்படும் நம்பகத்தன்மையே எமது வணிகத்தின் மைல்கல் என நாம் நம்புகின்றோம்.எமது நாட்டின் சட்டங்களால் நாம் கட்டுப்படுத்தப்படுவதுடன் நற்பிரஜையாக இருப்பதற்கும் எமது செயற்பாடுகளுக்கும் பொறுப்பேற்பதற்கும் முனைப்பாக செயற்படுகின்றோம். நிறுவனமொன்றாக எமது வெற்றி மற்றும் நெருக்கமாக ஒண்றினைந்த அணியாக செயற்படுதல் என்பன எமது உழியர்களின் திறமைகள், திறன்கள் மற்றும் நிபுணத்துவம் என்பவற்றிலேயே தங்கியுள்ளது என நாம் அடையாளம் கண்டுள்ளோம். எமது பல்வகைமையை நாம் பாராட்டுவதுடன் எமது பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நாம் தொடர்புபடும் அனைவரையும் மதித்து செயற்படலானது – நேர்மறையானதும் ஆக்கபூர்வமானதுமான வணிக தொடர்புகளுக்கு அத்தியாவசியமான அம்சம் என்பதனையும் நாம் நம்புகின்றோம். எமது குறிக்கோளின் முக்கியத்துவத்தினையும் மற்றும் எமது வாடிக்கையாளர்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் நாம் உணர்ந்துள்ளோம். இவை அனைத்தினையும் மனதிற் கொண்டு, எமது வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகச்சிறப்பாக செயற்படுவதற்கு பாடுபடுவதுடன், ஒவ்வொரு சவாலினையும் வெற்றிக்கான தீர்மானத்துடன் அணுகுகிறோம்.