English සිංහල
இப்போது விசாரிக்கவும்

தங்க சேமிப்பு வசதி (வாதியா)


அல்-ஃபலாஹ் வாதியா மையம் என்பது எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான தங்கச் சேமிப்பு வசதியாகும். அபனத்து தங்கப் பொருட்களும், நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாதவாறு, எங்களின் அனுபவம் வாய்ந்த ஊழியர்களால் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காகச் சோதிதிக்கப்படுகின்றன. பொருட்களின் எடை, தரம், அளவு மற்றும் சந்தை மதிப்பு உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய ஒரு தனித்துவமான 'தங்கச் சேமிப்புச் சான்றிதழ்' வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.

அல்-ஃபலாஹ் வாதியா தங்கச் சேமிப்பு வசதியின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், வாடிக்கையாளர் அவசரத் தேவைகளுக்காக, தங்கச் சேமிப்புச் சான்றிதழுக்கு ஈடாக எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி இலவச முன்பணத்தைப் பெறலாம்.

சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • தங்க சேமிப்புச் சான்றிதழுக்கு ஈடாக, இலாை விகிேம் இன்றி, 90% வரை பண முன்பணத்தை இலவசமாகப் பெறலாம்.
  • தங்கச் சேமிப்பு வசதி காலம் 3, 6 மற்றும் 12 மாதங்களாக வழங்கப்படுகிறது.
  • வைப்புத்தொப்பு தேவையில்லை; போட்டித்தன்மை வாய்ந்த பாதுகாப்பு பராமரிப்புக் கட்டணங்கள் வழங்கப்படுகின்றன.
  • தங்க ஆபரணங்களுக்கு இலவச தகஃபுல் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
  • மிக உயர்ந்த பாதுகாப்பும் பாதுகாப்பு உறுதியும் வழங்கப்படுகிறது.
  • நாடு முழுவதும் அபமந்துள்ள 200-க்கும் மேற்பட்ட LOLC ஃபைனான்ஸ் கிபளகள் மற்றும் பிரத்யேக அல்-பலாஹ் பமயங்களை அணுகும் வசதி.

அணுகல் வசதி
எழுத்து அளவு 100%
வரி உயரம் 1.5