முராபஹா என்பது வாடிக்கையாளருக்கும் அல்-பலாஹ்விற்குமுடையிலான
விற்பனை ஒப்பந்தமாகும். இதற்கிணங்க அல்-பாலாஹ்வானது முதலில்
வாடிக்கையாளரின் வேண்டுகோளின் பேரில் பொருட்களை கொள்வனவு செய்து
அவற்றினை அதே வாடிக்கையாளருக்கு இலாம்மொன்றினை வைத்து விற்பனை
செய்யும்.
நீங்கள் ஏதேனுமொரு பொருளை அல்லது சொத்தை கொள்வனவு செய்ய விரும்பினால்
இம்முறைமை உங்களது தேவையினை பூர்த்தி செய்வதற்கு மிகப்பொருத்தமான
வழங்குவதுடன் நீங்கள் வெற்றி பெறவும் உதவி செய்யும். வியாபாரத்
தொழிற்துறைக்கு இது மிகவும் பொருத்தமானது. உங்கள் வியாபாரத்தினை
விருத்தி செய்யும் பொருட்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வளத்தை
நோக்கி உங்களைக் கொண்டு செல்லும் சக்தியான தொழில் முயற்சிகளை
ஊக்குவிப்பதில் நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு வீட்டையோ அல்லது ஒரு
வாகனைத்தையோ கொள்வனவு செய்தல் எவ்வளவு முக்கியமானது என நாம் அறிந்த
விதத்தில், சொத்தை மையமாகக் கொண்ட நிதி என்ற வகையில் இம்முறைமை
தனிப்பட்ட இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமானது. உங்கள் பங்காளர் என்ற
வகையில் நாம் உங்களுக்காக ஒரு சொத்தைக் கொள்வனவு செய்வோம். நிலையான
மாதாந்த தவணைக் கட்டணங்களை செலுத்துவதன் மூலம் நீங்கள் பயனை
அனுபவிக்க முடியும்.
சொத்துக்கள் சந்தைப் பெறுமதிக்கு கொள்வனவு செய்யப்படுகின்றன. இங்கே
இலாபம் போட்டித் தன்மையுடையதாகக் காணப்படும்.
கொடுப்பனவுகளானவை தவணைக்கட்டண அடிப்படையிலோ அல்லது உங்களது
பனத்திற்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்ட கொடுப்பனவுகளாகவோ
செலுத்தப்பட முடியும்.
வியாபாரத்திற்கான நிதி வழங்கல் மற்றும் சொத்துக் கொள்வனவு, பதிவு
செய்யப்பட்ட வாகனங்கள், பொறிகள், இயந்திரங்கள் மற்றும்
உபகரணங்களுக்கு மாத்திரம் ஏற்புடையதாகும்.