English සිංහල
இப்போது விசாரிக்கவும்

வகாலா வேக வரைவு


‘வகாலா ஸ்பீட் டிராஃப்ட்’ என்பது, வணிக வங்கிகளால் வழங்கப்படும் மிகவும் பிரபலமான வழக்கமான ‘LOLC ஸ்பீட்-டிராஃப்ட்’ அல்லது நிரந்தர மற்றும் தற்காலிக ஓவர் டிராஃப்ட் வசதிகளுக்கு ஒரு துணையாக விளங்கும் ஒரு மாற்று நிதித் தீர்வாகும். அதன் பெயர் குறிப்பிடுவது போல, வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு வசதியான நேரத்தில் விரைவான பண முன்பணத்தைப் பெறலாம்.

குறுகிய மற்றும் நடுத்நர கால செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும் முக்கிய மற்றும் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிகங்களுக்கு இந்த வசதி மிகவும் பொருத்தமானது. இது, வணிக வளர்ச்சியின் ஒரு பகுதியாக சோத்து வாங்குதல், வர்த்தக இருப்பு மற்றும் மூலப்பொருட்களை நிரப்புதல், தொழிற்சாலை புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கங்கள் போன்ற பலதரப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நெகிழ்வான தேர்வாகும்.

வாடிக்கையாளரின் பணத் தேவை மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன்களின் அடிப்படையில், நெகிழ்வான அளவுகளில் நிதிபயப் பெறும் வசதி இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். 'வகாலா ஸ்பீட் டிராஃப்ட்' வணிகத்தின் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உயர் மட்ட வணிகச் செயல்பாடுகளை எளிதாக்கவும் உதவுகிறது. மேலும், இது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப நிதியைப் பயன்படுத்துவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. நிதியைப் பயன்படுத்துவதையோ அல்லது எடுப்தையேர மட்டுமே அடிப்படையாகக் கொண்டு லாபக் கூடுதல் கணக்கிடப்படுவதால், இது குறைந்த செலவுடையதாகவும் வணிக நோக்கங்களுக்கு மிகவும் சாத்தியமானதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

LOLC அல்-ஃபலாஹ் ‘வகாலா ஸ்பீட் டிராஃப்ட்’ என்பது வகாலா-பில்-இஸ்திஸ்மார் கோட்பாட்டின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படுகிறது. வாடிக்கையாளர், LOLC அல்-ஃபலாஹ்-இன் முகவராக நியமிக்கப்படுகிறார். வழங்கப்படும் நிதியானது, வர்த்தகப் பரிவர்த்தனைகள் மற்றும் வணிகங்களுக்கான செயல்பட்டு மூலதனத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியுடன் அவர் நியமிக்கப்படுகிறார். வாடிக்கையாளருக்குக் குறுகிய மற்றும் நடுத்தர கால நிதி வழங்கப்படுகிறது. இதன் திருப்பிச் செலுத்தும் முறைகள் நெகிழ்வானவை மற்றும் இலாபப் பகிர்வு முபறபய அடிப்படடையாகக் கொண்டவை.

அணுகல் வசதி
எழுத்து அளவு 100%
வரி உயரம் 1.5