English සිංහල
இப்போது விசாரிக்கவும்

வேல்ட் கிறெடிட் கார்ட்


கம்பீரத் தோற்றமுடைய ‘சேசத்த்’ அடையாளம் செல்வத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதுடன் செழிப்பின் பேரின்பத்தையும் குறித்து நிற்கின்றது. அத்துடன் இது நிறைவான வாழ்வின் பரிபூரணத்தையும் குறிப்பிடுகின்றது. LOLC ஃபினான்ஸ் நிறுவனமாகிய நாம் உங்கள் கடனட்டை பங்காளராக, அனுகூலங்களும் உலகத்தரம் வாய்ந்த தனித்துவமிக்க மகிழ்ச்சியும் பேரின்பமும் கொழிக்கும் வாழ்வியல் முறைமையில் அடியெடுத்து வைப்பதற்கு அழைப்பு விடுக்கிறோம்.உயரிய நிலையான பாதுகாப்பு, அதிகபட்ச சௌகர்யம் மற்றும் உலகளாவிய ஏற்பு என்பனவற்றினையுடைய உங்கள் LOLC ஃபினான்ஸ் மாஸ்டர் அட்டையான வேல்ட் கிறெடிட் கார்ட் இனை உபயோகிப்பதன் மூலம் உங்களை சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் உங்கள் அக மகிழ்வினை பரப்புவதனூடாக ‘உங்களுக்குள் உள்ள நற்குணத்தினை செழிப்பாக்குங்கள்’

தகுதி பெறுவதற்கான தேவைப்பாடு - மாதாந்த தேரிய வருமானம் ரூபா ரூபா. 500,000/- மற்றும் அதற்கு மேல்

தேவையான ஆவணங்கள்


பொதுவான ஆவணங்கள்
 • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நிலையான கிறெடிட் அட்டை விண்ணப்பப் படிவம்
 • தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப் பத்திரம்/ கடவுச்சீட்டின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி (காலவதியான அடையாளப்படுத்தல் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.)
 • நிரந்தர முகவரியானது தேசிய அடையாள அட்டையிலுள்ள முகவரியிலிருந்து வேறுபடுமாயின் அட்டைக்காக கோரிக்கை விடுப்பவரின் பெயரின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்குள் திகதியிடப்பட்டதாகக் காணப்படும் பயன்பாட்டு பட்டியலொன்றின் பிரதி
 • அட்டைக்காக கோரிக்கை விடுப்பவர் மேலதிக வருமான விபரங்களை வெளிப்படுத்துவாராயின் அத்தகைய ஏனைய வருமானங்கள் தொடர்பான சான்று
 • இறுதி கடனட்டைக் கூற்று (விருப்பத் தேர்வு)
 • உத்தியோகத்தின் நிலையை சரிபார்த்து கொள்வதற்கான தொழில் உறுதிப்படுத்தல் கடிதம், சேவைக்காலம், சம்பளம் தொடர்பான விபரங்கள், EPF விபரங்கள் மற்றும் பதவி
 • தொழில் வழங்குனரால் சான்றுபடுத்தப்பட்ட சம்பளக் கூற்று
 • வியாபாரப் பதிவு
 • பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக காணப்படும் பட்ச்சத்தில் படிவம் 1, 2A மற்றும் படிவம் 20 (பொருத்தமாயின்)
 • கடந்த 2 ஆண்டுகளுக்கான வருட வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கான கணக்காளரின் கடிதம்.
 • கணக்காய்வு செய்யப்பட்ட அல்லது முகாமைத்துவக் கணக்குகள்
 • கடந்த 3 மாதங்களுக்கான நடைமுறை அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு கூற்றுக்கள்
 • கடந்த 2 ஆண்டுகளுக்கான வரி கொடுப்பனவு (விருப்பத் தேர்வு) .
 • கடந்த ஒராண்டு காலமாக விண்ணப்பதாரி தொழில்வாண்மையில் ஈடுபட்டிருந்தார் என்பதற்கான போதிய சான்று
 • உரிய தொழில்முறை அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தொழில் புரிவதற்கான அனுமதி பத்திரம் / உறுப்புரிமை அட்டை
 • இறுதி வருமான வரிக் கொடுப்பனவுகள் (விருப்பத் தேர்வு)

உங்கள் கிறெடிட் கார்ட் பட்டியல்களை செலுத்துதல்


காசு மூலமான கொடுப்பனவு

 • எந்தவொரு LOLC ஃபினான்ஸ் கிளையிலும் காசுக் கொடுப்பனவை மேற்கொள்ள முடியும்.
 • பணத்தினை தபால் மூலம் அனுப்ப வேண்டாம்.
 • சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளானவை உடனடுத்த வேலை நாளில் செயற்படுத்தப்படும்.
 • காசோலைகளானவை குறுக்குக் கோடிடப்பட்டிருத்தல் (கணக்கு வைத்திருப்பவருக்கு மாத்திரம்) வேண்டும் என்பதுடன் அதில் அட்டையின் இலக்கத்தினையும் உள்வாங்கியிருத்தல் வேண்டும். உ+ம்: LOLC ஃபினான்ஸ் PLC, O/A அட்டை இல. xxxx xxxx xxxx xxxx.
 • மேற்கூறப்பட்ட உதாரணத்திற்கு அமைவாக வரையப்பட்டிருந்தாலேயொழிய அட்டையினை வைத்திருப்பவரின் பெயரில் வரையப்பட்ட மூன்றாம் நபர் காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
 •  கடனட்டையில் பணத்தினை வரவு வைத்தலானது காசோலகள் வசூலிக்கப்பட்டதன் பின்னரே மேற்கொள்ளப்படும். காசோலைகளை வசூலித்தல் மற்றும் அவற்றின் மீதான செயன்முறைகளுக்கு குறைந்தபட்சம் மூன்று வேலை நாட்களையும் அதிகபட்சம் ஆறு வேலை நாட்களயும் ஒதுக்குங்கள்.
 • பணக் காசோலகள் மற்றும் பின்னர் திகதியிடப்பட்ட காசோலைகள் என்பன கொடுப்பனவுகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
 • காசோலைக் கொடுப்பனவுகளானவை தபால் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்குமிடத்து அவை கணக்கினை சென்றடைய குறைந்தபட்சம் ஒன்பது வேலை நாட்களை ஒதுக்குங்கள்
 • தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் அனைத்து காசோலைகளும் “முகாமையாளர் –கிறெடிட் கார்ட் தொழிற்பாடுகள், இல. 438, ஹெவலொக் வீதி, கொழும்பு 05” என முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

அட்டையினை வைத்திருப்பவர் தனது கிறெடிட் கார்ட் பட்டியலுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக LOLC ஃபினான்ஸ் சேமிப்புக் கணக்கில் வரவு வைப்பதற்கு, நிலையான அறிவுறுத்தல் வசதியினை செயற்படுத்திக்கொள்ள முடியும். அட்டையினை வைத்திருப்பவர் கொடுப்பனவை செலுத்த வேண்டிய திகதியில் கூற்று மீதியில் வரவு வைக்க வேண்டிய தொகையின் அளவினை 5% - 100% இற்குமிடைப்பட்ட வீதத்தில் தெரிவு செய்துகொள்ள முடியும்.

LOLC ஃபினான்ஸ் சேமிப்புக் கணக்கிலிருந்து உங்களது கடனட்டை கணக்கிற்கு பணத்தை இலவசமாக மாற்றீடு செய்வதற்கு LOLC ரியல் டைம் இனை பயன்படுத்துங்கள்.

அட்டையினை வைத்திருப்பவருக்கு ஏனைய வங்கிகளில் காணப்படும் அவரது சேமிப்பு / நடைமுறைக் கணக்கிலிருந்தான பணத்தை கடனட்டை கணக்கிற்கு CEFTS இனூடான மாற்றீடு செய்துகொள்ள முடியும்

இல.438, ஹெவலொக் வீதி, கொழும்பு 05 ஸ்ரீ லங்கா.

வாடிக்கையாளர் சேவை: +94 11 5718888 (பொதுவானது)