ஃபினான்ஸ் நிறுவனத்தின் நிலையான வைப்பு முறையானது ஒரு பாதுகாப்பான
நீண்டகால முதலீட்டு தெரிவாகும். இது அதிக வருமானத்தை தருகின்றது. இது
எளிதான மற்றும் தொந்தரவற்ற நிதித் தயாரிப்பாகும். நிலையான வட்டி
வீதங்களை அடிப்படையாகக்கொண்டு 3-5 வருட காலத்திற்கான தனிநபர் மற்றும்
நிறுவன வாடிக்கையாளர் பிரிவுக்கு இந்த தயாரிப்பு கிடைக்கும்.
இந்த தயாரிப்பின் சிறப்பம்சம் இதுவொரு வர்த்தக கருவியாக
உள்ளமையாகும். இதன் முதலீட்டு மதிப்பு அப்படியே பேணப்படும் அதேவேளை
இது பரிசாக வழங்கப்படலாம். வைப்புச் செய்யப்பட்ட திகதி மற்றும்
முதிர்வுத் திகதி ஆகிய திகதிகளுக்கிடையில் எந்த நேரத்திலும் ஒரு
மூன்றாந்தரப்பினருக்கு அது இடமாற்றப்படவோ அல்லது விற்கப்படவோ
முடியும்.
அன்புக்குரிய ஒருவருக்குக் கூட பரிசாக வழங்கத்தக்க வர்த்தகக் கருவி.
வைப்பு செய்யப்பட்ட நேரத்தில் பொருந்தக்கூடிய நிபந்தனைக்குப்
பாதிப்பு இல்லாமல் உரிமை மாற்றப்படமுடியும்.
ஏனைய நிதி நிறுவனங்களுக்கு நிதியை மாற்றக்கூடிய வசதி.